Pooja Hegde :எல்லாமே கனவு போல இருக்காம் பூஜா ஹெக்டேவுக்கு.. எதைப் பத்தி பேசியிருக்காங்க தெரியுமா?
மும்பை : நடிகை பூஜா ஹெக்டே தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே பாலிவுட்டில் சல்மான் கானுடன் இணைந்து நடித்துள்ள கிசி கி பாய் கிசி கி ஜான் படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. படம் தமிழில் அஜித், தமன்னா நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு : நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். முன்னதாக ஜீவாவுடன் இணைந்து முகவரி படத்தில் அவர் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்காத நிலையில், தெலுங்குப் படங்களில் கமிட்டாகி நடித்தார்.
தமிழில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தின் லாஜிக் மீறல்கள் படத்தின் சொதப்பலுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையிலான கெமிஸ்ட்ரி மற்றும் படத்தின் பாடல்களில் அவர்களது நடனம் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தற்போது சல்மான் கானுடன் இணைந்து கிசி கி பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரம்ஜானையொட்டி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் வெங்கடேஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நாசர், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்காக கிசி கி பாய் கிசி கி ஜான் படம் உருவாகியுள்ளது. வீரம் படம் முன்னதாக தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரிலும் கன்னடத்தில் ஒடியா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியிலும் ரீமேக்காகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் அதிகமான மசாலாவுடன் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்தப் படத்தில் நடித்துள்ளது கனவு போல தோன்றுவதாக நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய தொடையழகை ஏற்றிக் காட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே, கேப்ஷனில்தான் சல்மானுடன் தான் நடித்துள்ள கிசி கி பாய் கிசி கி ஜான் படம் குறித்து இப்படி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவரது வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகிறார்.



Click it and Unblock the Notifications











