எம்புட்டு அழகு.. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் பூஜா ஹெக்டேவின் ஹாட் போட்டோஸ்!
சென்னை : நடிகை பூஜா ஹெக்டே ஜிகுஜிகு உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே.
உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே
மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியைத் தழுவியதால், தெலுங்கு பக்கம் சென்ற அம்மணிக்கு படவாய்ப்பு குவிந்தது. அல்லு அர்ஜுனுடன் அலா வைகுந்தபுரம்லோ இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் டாக் ஆஃப் தி டவுனாகவே இருந்தது.

பீஸ்ட் படத்தில்
தெலுங்கில் டாப் நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே, தமிழில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வசூலை பெற்ற போதும், படுமோசமான விமர்சனங்களை பெற்றது. பூஜா நடித்த இரண்டாவது படமும் எதிர்பார்த்த பெயரை பெற்றுத்தராததால், மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றார்.

தோல்வி அடைந்த ராதே ஷ்யாம்
பூஜா ஹெக்டே, பிரபாசுடன் இணைந்து ராதே ஷ்யாம் திரைப்படத்தில், நடித்தார் அந்த படம் படதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா திரைப்படத்திலும் பாலிவுட்டில் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த சர்க்கஸ் திரைப்படத்திலும் நடித்தார்.

பாலிவுட்டில் பூஜா ஹெக்டே
மேலும் நடிகர் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்த எஃப்3 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். மகேஷ்பாபு நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் SSMB28 படத்திலும் பாலிவுட் கிசி கா பாய் கிசி கா ஜான் படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல
இணையத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் பூஜா ஹெக்டே தனது ரசிகர்களை மகிழ்விக்க, மினு மினுக்கும் மார்டர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப தொடை அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து, தங்கள் இதயத்தை பரிசாக அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











