என்ன சாப்புடறது... குழப்பத்தில் பீஸ்ட் பட நாயகி... யாராவது ஹெல்ப் பண்ணுங்களேம்பா:
மாலத்தீவு : நடிகை பூஜா ஹெக்டே மாலத்தீவில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
அவரது நடிப்பில் மோஸ்ட் எலிஜிபள் பேச்சுலர் படம் வெற்றியடைந்துள்ளது. அடுத்ததாக ராதே ஷ்யாம் படம் ரிலீசாக உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இதேபோல தமிழிலும் முகமூடி படத்திற்கு பிறகு தன்னுடைய இன்னிங்சை துவங்கியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மாலத்தீவில் சுற்றுலா
இந்நிலையில் இடையில் கிடைத்த கேப்பில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் பூஜா ஹெக்டே. இந்திய நடிகர், நடிகைகள் அதிகமாக சுற்றுலா செல்லும் இடமாக மாலத்தீவு மாறியுள்ளது. அங்கு தங்களுடைய கேளிக்கைகளை அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்

கப்பல் பயணம்
இந்நிலையில் தற்போது மாலத்தீவில் உள்ள பூஜா ஹெக்டே அங்கு நடுக்கடலில் கப்பலில் பயணம் மேற்கொண்டு அந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இதன்மூலம் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிகினியில் போஸ்
மெரூன் நிற பிகினியில் கைகளை மேலே தூக்கி சூப்பரான போஸ் கொடுத்திருந்தார் பூஜா. இந்தப் புகைப்படம் ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலானது. இதனிடையே, அங்கு ஒரு உணவகத்தில் உணவருந்த தான் காத்திருக்கும் புகைப்படத்தையும் பூஜா பகிர்ந்துள்ளார்.
Recommended Video

இரவு உணவுக்கு தயார்
தன்னுடைய மூடை இரவு உணவிற்காக தான் தயார் படுத்தி வருவதாக அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் அவர் மிகவும் அழகான மாடர்ன் அவுட்ஃபிட்டில் அழகாக காணப்படுகிறார். விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படத்திலும் அவர் விஜய்க்கு அழகான ஜோடியாக காணப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











