பட வாய்ப்பு இல்ல...கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை பூஜா ஹெக்டே.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தற்போது படவாய்ப்பே இல்லாததால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது தேவா என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை தவிர அம்மணியின் கைவசம் எந்த படமும் இல்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து அனைத்து மொழி ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே, விஜய், அல்லு அர்ஜூன், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படத்தில் ஜீவா ஜோடியாக சக்தி என்ற கேரக்டரில் நடித்து அதிகம் கவனம் ஈர்த்தார் பூஜா ஹெக்டே.

Actress pooja hegde Stunning Photoshoot trending on social media

புட்டபொம்மா... புட்டபொம்மா: முகமூடி படத்திற்கு பின் தமிழில் படவாய்ப்பு இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்றார். இவர் தெலுங்கில் அறிமுகமான முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார். பூஜா ஹெக்டே கடைசியாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆலா வைகுந்தபுரம்லு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

Actress pooja hegde Stunning Photoshoot trending on social media

அடுத்தடுத்து தோல்வி படம்: இந்த படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கே சென்ற பூஜா ஹெக்டே தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து எதிர்பார்த்த வெற்றியை தராமல் போனதால் தமிழில் படவாய்ப்பை இழந்தார்.

Actress pooja hegde Stunning Photoshoot trending on social media

பீஸ்ட் படத்திற்கு பின் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சர்யா ஆகிய படங்களும் படுதோல்வியடைந்தன. அதையடுத்து, சல்மான் கானுக்கு ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்திருந்தார். முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்..

Actress pooja hegde Stunning Photoshoot trending on social media

கிண்டலடிக்கும் பேன்ஸ் : தமிழ்,தெலுங்கு என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஒரே ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்து இருக்கிறார்.

Actress pooja hegde Stunning Photoshoot trending on social media

ஒரு காலகட்டத்தில், படவாய்ப்புகள் அதிகளவில் வந்து தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் நின்று கொணடிருந்தனர். ஆனால், தற்போது படமே இல்லாததால், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் எப்படி கவர்ச்சி காட்டினாலும் நோ யூஸ் என்று அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X