நடிகர் பிரபாஸ் ராசிதான் காரணமா? 12 மில்லியனை தொட்ட பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி!

By

சென்னை: நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 12 மில்லியனாக உயர்ந்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லை.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

அந்த ரொமான்ஸ்

அந்த ரொமான்ஸ்

இப்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பிரபாஸ் பிறந்த நாளன்று மோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. பிரபாஸும் பூஜாவும் ஸ்டைலாக ரயிலில் செல்லும் அந்த ரொமான்ஸ் வீடியோவும் வைரலானது.

கபி ஈத் கபி தீவாளி

கபி ஈத் கபி தீவாளி

இதற்கிடையே இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. இதையடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்.

சமந்தாவை தாண்டி

சமந்தாவை தாண்டி

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 12 மில்லியனை தொட்டுள்ளனர். ஏற்கனவே 11 மில்லியனை சமந்தா தாண்டி இருந்தார் பூஜா. இப்போது 12 மில்லியனை தொட்டு இருக்கிறார். இதற்கு அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரபாஸ் ராசிதான் இதற்கு காரணமா என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X