ராசியில்லாத நடிகை.. அடுத்தடுத்து படங்கள் பிளாப்.. வெற்றி பெற கோவிலில் பூஜை செய்த பூஜா ஹெக்டே!

சென்னை : அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதால் நடிகை பூஜா ஹெக்டே கோவில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே,

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களுக்கும் மேலாக பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படங்கில் கமிட்டாக முடியும் என்று நினைத்தார். ஆனால், பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து இணையத்தையே திணறடித்தது. அது மட்டும் இல்லாமல் பாடல்களை தவிர அந்த படத்தில் பூஜாவுக்கு சொல்லும்படி எந்த வசனமும் இல்லாததால், தமிழில் படவாய்ப்பு வரவில்லை.

தொடர்ந்து படங்கள் பிளாப்

தொடர்ந்து படங்கள் பிளாப்

தமிழில் தான் கைகொடுக்கவில்லை கோலிவுட்டில், நமக்கு இருக்கவே இருக்கு நினைத்த பூஜா ஹெக்டோவின் ஆசையில் மண்விழுந்து விட்டது. சிரஞ்சீவி, ராம் சரண் நடித்த ஆச்சார்யா படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. அதே போல,பாகுபலி புகழ் பிரபாசுடன் இணைந்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்தார். பல கோடி ரூபாயில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தி படமாக வெளியான இந்த படமும் காலை வாரி விட்டது.

ராசியில்லா நடிகை

ராசியில்லா நடிகை

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் கபூடன் இணைந்து சர்க்கஸ் படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வி அடைந்ததால் பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் ராசியில்லாத நடிகை என ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை அடைந்த நிலையில், தற்போது வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பூஜா ஹெக்டேக் உள்ளார்.

பெத்தம்மா கோவிலில் சிறப்பு பூஜை

பெத்தம்மா கோவிலில் சிறப்பு பூஜை

இந்த நிலையில் பூஜா ஹெக்டே ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டுள்ளார். அங்கு வேத பண்டிதர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த ஆண்டு நடிக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டி அம்மனை தரிசித்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு வந்த பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர்கள் அவரோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

விஜய்தேவரகொண்டாவுடன்

விஜய்தேவரகொண்டாவுடன்

பூஜா ஹெக்டே தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X