Actress Pooja Hegde: சிரிப்பால் ரசிகர்களை சிறையிட்ட பால்கோவா.. பூஜா ஹெக்டே போட்டோஷுட்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறும் பூஜாவின் கனவு சாத்தியப்படவில்லை. தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் அதிகமான கவனம் செலுத்தி நடித்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முகமூடி படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவரை தமிழ் திரையுலகம் கோலிவுட் அழைத்து வந்தது.

இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். படத்தில் நடிகர் விஜய்க்கு இணையாக பாடல்களில் பூஜா டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருந்தார். மேலும் இவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. ஆனால் பாடல்கள் பெற்ற வெற்றியை படம் கொடுக்க தவறிவிட்டது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. பூஜா ஹெக்டேவின் இந்த ரீ என்ட்ரியும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறார்.

Actress Pooja Hegdes new photoshoot pictures shared in Instagram

நடிகை பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் அடுத்தடுத்து அல்லு அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. தெலுங்கில் முன்னணி நாயகியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார்.

விஜய்யுடன் ஜோடி: இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது டான்ஸ் மூவ்மென்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. விஜய்க்கு இணையான இவரது ஸ்டெப்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் பாடல்களும் ஹிட்டடித்தன. இருந்த போதிலும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் பாலிவுட்டிலும் இவர் சல்மான்கான் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் வெளியான அஜித்தின் வீரம் படத்தை ரீமேக் செய்து இந்த படம் வெளியானது. இந்த படமும் பூஜா ஹெக்டேவிற்கு சரியாக கைகொடுக்கவில்லை.

Actress Pooja Hegdes new photoshoot pictures shared in Instagram

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்: ஆயினும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூக வலைதளங்களிலும் பூஜா ஹெக்டே மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோ சூட் புகைப்படங்கள் மிகவும் மாஸாகவும் கிளாஸாகவும் காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமான அளவில் கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

புதிய போட்டோஷுட் புகைப்படங்கள்: இந்த புகைப்படங்களில் அழகாக இருப்பதுடன் தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை கவரவும் பூஜா ஹெக்டே தவறவில்லை. ட்ரெடிஷனல் மற்றும் நவீனம் கலந்த தோற்றத்தில் இந்தப் புகைப்படங்களில் பூஜா ஹெக்டே காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சில மணிநேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளன. அடுத்தடுத்த பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகளால் ஏராளமான ரசிகர்கள் கவரப்பட்டு வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 26.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X