நம்பாதீங்க.. சும்மா கிளப்பி விடுறாங்க.. வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்!

சென்னை: தலைவன் இருக்கிறான் படத்தில் தான் நடிக்கிறேன் என்ற வதந்திக்கு நடிகை பூஜா குமார் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தேவர்மகன் 2ம் பாகத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் விஜய்சேதுபதி நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது.

பிரச்சனையில் இருந்து தப்பிக்க

பிரச்சனையில் இருந்து தப்பிக்க

தேவர்மகன் என்ற டைட்டில் பிரச்சனை 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேவர்மகன் 2ம் பாகத்திற்கு ‘தலைவன் இருக்கிறான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படம் குறித்த பல தகவல்கள், வதந்திகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மகனாக

மகனாக

தேவர்மகன் 2ம் பாகத்தில் சிவாஜி கணேசன் இடத்தில் கமல்ஹாசனும், கமல் இடத்தில் நடிகர் சூர்யாவும் நடிக்க உள்ளதாக அண்மையில் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலானது. ஆனால், அதுவும் வெறும் வதந்தி தான் என்றும், கமல்ஹாசன் உடன் சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல்கள் அதன் பின்னர் வெளியாகி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

இந்த படத்திலும்

இந்த படத்திலும்

விஸ்வரூபம் 1,2 மற்றும் உத்தம வில்லன் என உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த நடிகைகள் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா இந்த படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாக அண்மையில் ஒரு தகவல் வைரலாக சமூக வலைதளத்தை ஆட்டி படைத்து வருகிறது.

நம்பாதீங்க

நம்பாதீங்க

இந்நிலையில், தலைவன் இருக்கிறான் படத்தில் தான் நடிக்கப் போவதாக வெளியாகி இருப்பது வெறும் வதந்தி தான் என்றும், அந்த படத்தில் நடிப்பது தொடர்பாக தன்னிடத்தில் இதுவரை எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. சும்மா கிளப்பி விடுறாங்க, நம்பாதீங்க, ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் அதுவரை காத்திருங்கள் என நடிகை பூஜா குமார் இந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதேபோல

இதேபோல

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்துக்கும் இதேபோல பல புரளிகளும் கட்டுக் கதைகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. படத்தையே டிராப் செய்து விட்டதாகவும், இரண்டு பாகங்களாக வெளியாகப் போவதாகவும் வைரலான வதந்திகளுக்கு லைகா தரப்பு ஆதாரமற்ற தகவல் என மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X