ராஜஸ்தானின் சின்னப்பொண்ணு.. பூஜாகுமாரின் பக்கா போஸ்

சென்னை: பூஜாகுமார் தனது த்ரோபேக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜாகுமார், உத்தமவில்லன், விஸ்வரூபம் போன்ற படங்களில் கமலுடன் நடித்த முன்னணி நடிகை. சுமார் 20 படங்களுக்கு மேல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் சற்று வித்யாசமான கதைக்களமாக இருப்பது இவரது கூடுதல் பலம்..

 Actress pooja kumar post pictures on twitter

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், வீட்டில் இருக்கும் நடிகைகள் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பூஜா குமாரும் தனது த்ரோபேக் புகைப்படம் என்று ராஜஸ்தானில் ஷூட்டிங்கில் எடுத்த பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் மெரூன் நிற உடையில், பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். மாடர்ன் உடைகளில் போஸ் கொடுக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இருப்பதுடன், அதில் எவ்வாறு கிளாமர் அழகாக காட்ட முடியுமோ, அவ்வாறே கவர்ச்சிகரமாக இருக்கிறார்.

 Actress pooja kumar post pictures on twitter

பல திறமைகளை கொண்ட இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் ஏதும் சரியாக அமையவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை தந்தது. கமலுடன் நடித்த காலகட்டத்தில் கமலுடன் சில பொது விழாக்களிலும், குடும்ப நிகழ்ச்சியிலும் அவர் தென்பட்டது சினிமா வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பூஜா, கமலுடன் சேர்ந்து அரசியலிலும் ஈடுபடுவார் என்று தோன்றுகிறது. சைலெண்டாக கட்சி பணிகளை செய்து வருகிறார் என்று ஒரு தரப்பு கூறிவருகிறது. பன்முக திறமை கொண்ட இவர் பல தமிழ் படங்களில் ரீ எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X