டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!
சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார்.
உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

விடியும் முன்...
இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார்.

திருமணம்...
இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தோன்றுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பூஜாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஷன் டிசைனர்...
இது காதல் திருமணம் என்றும், மாப்பிள்ளையின் பெயர் தீபக் சண்முகநாதன் என்றும் கூறப்படுகிறது. ஈழத்தைச் சேர்ந்த தீபக், மாடலிங் மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார்.

காதலுக்கு சம்மதம்...
தீபக் தனது பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி தனது காதலை பூஜாவிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பூஜா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் திருமணம்...
அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மவுனம் சாதிக்கும் பூஜா...
பொதுவாக இது போன்ற திருமணம், காதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவரும் போது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ஆம், இல்லை என விளக்கமளிப்பர். ஆனால், பூஜா தொடர்ந்து மவுனம் சாதிப்பது திருமணத் தகவலை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











