இப்படி கூட கட்டிப்பிடிக்கலாமா.. கணவருடன் கலக்கல் போஸில் பூஜா ராமச்சந்திரன்.. வைரலாகும் செம பிக்ஸ்!
சென்னை: நடிகை பூஜா ராமச்சந்தின் யோகா செய்யும் கணவர் மீது ஏறி அமர்ந்து கலக்கல் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றி பெரும் பிரபலமானார். இதனை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார் பூஜா.

அந்தகாரம் படம்
காதலில் சொதப்புவது எப்படி? நண்பன், பீசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியாகவுள்ள அந்தகாரம் படத்திலும் பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார்.

ஜான் கோக்கென்
கடைசியாக கைதி படத்தில் ஃபீமேல் லீடிங் ரோலில் நடித்தார் பூஜா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா. இந்நிலையில் தெலுங்கு நடிகரான ஜான் கோக்கேனை கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பூஜா.

பாகுபலி நடிகர்
ஜான் கோக்கேன் முதலில் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பூஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஜான் கோக்கேன் பாகுபலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கொண்டாடும் ஜோடி
இருவரும் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். என்ன விசேஷம் என்றாலும் இருவரும் சேர்ந்து செல்பி எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களின் திருமண நாளை கொண்டாடினர்.

வைரல் போட்டோ
அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். இதேபோல் இருவரும் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

எக்குத்தப்பாக கட்டிப்பிடித்து
அதில் ஜான் கோக்கென் குனிந்தப்படி யோகா செய்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் மீது ஏறி எக்குதப்பாக கட்டிப்பிடித்தப்படி போஸ் கொடுத்துள்ளார் பூஜா ராமச்சந்திரன். அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள பூஜா ராமச்சந்திரன், "சில நேரங்களில் நமக்குத் தேவையானது ஒரு அரவணைப்பு! ஏனென்றால் இப்போது எதுவும் சாதாரணமானது அல்ல! "என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











