Poonam Bajwa: கையில் செருப்பு… பல ஆயிரம் லைக்குகள்.. பூனம் பாஜ்வாவின் கில்லாடி லுக்!
சென்னை: நடிகை பூனம் பாஜ்வா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கருப்பு நிற கவர்ச்சியும் ஸ்டைலிஷ் தோற்றமும் கொண்ட உடையில், சோபாவில் அமர்ந்தபடி விதவிதமான போஸ்களில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமைக்காகவும், கிளாமர் தோற்றத்திற்காகவும் தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார். 'சேவல்', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர', 'ரோமியோ ஜூலியட்' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். ஆனால், பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து கவர்ச்சிக்கு ரூட்டுக்கு மாறிய இவர், முத்துனகத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடித்தார்.

நடிகை பூனம் பாஜ்வா: நடிப்பைத் தவிர, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தனது ஃபோட்டோஷூட் படங்கள், பயண அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். தற்போது, அவரை இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் (40 லட்சம்) ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது பூனம் பாஜ்வா, கருப்பு உடையில் மிகவும் கவர்ச்சியான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ரசிகர்களை போதை ஏற்று பார்வையுடன் ஒரு பார்வை பார்த்துள்ளார். அதோடு, கையில் செருப்பை வைத்துக்கொண்டு, தன்னம்பிக்கை நிறைந்த பார்வையுடன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கையில் என்ன செருப்பா: போட்டோவை பார்த்த ரசிகர்கள் "போல்டான லுக்", "கிளாமர் குயின்", "எப்போதும் ஸ்டைலிஷ்" போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பூனம் பாஜ்வா போட்டோவை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகளும், கமெண்ட்களும் அதிக அளவில் குவிந்து வருகிறது. இந்த புதிய புகைப்படங்கள் மூலம், பூனம் பாஜ்வா மீண்டும் ஒருமுறை இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார். அவரது ஸ்டைலும் ஸ்டார் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











