பால்கனியில் நின்னுக்கிட்டு கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா.. கிரணுக்கே டஃப் கொடுப்பாங்க போல!
சென்னை: நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் போட்டோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய பின் தமிழுக்கு வந்தவர்.

பூனம் பாஜ்வா: அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. ஜீவாவுடன் சில படங்களில் ஜோடிப் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பால் போன்ற நிறம், வாளிப்பான உடல், மயக்கும் அழகுடன் இருந்த பூனம் பாஜ்வாயை தமிழ் ஆடியன்சுக்கு மிகவும் பிடித்துப்போனதால், தமிழில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.
ஜீவாவுக்கு ஜோடி: தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்துன கத்திரிக்கா, குருமூர்த்தி என பல படங்களிலும் நடித்தார். இதில் ஜீவாவுடன் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படங்கள் மட்டும்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.
இணையத்தில் குறையாத மார்க்கெட்: 80 கிட்ஸ் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். ஆனால், புதுப்புது நடிகைகளின் வரவால் இவரின் மார்க்கெட் காணாமல் போனது. எனவே, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக மாறி படுகவர்ச்சியான போட்டோக்களை பகிர்ந்து இணையத்தில் தனது மார்க்கெட் குறையாமல் பார்த்துக்கொண்டார்.
படவாய்ப்புக்காக: உடல் எடை கூடி ஆண்ட்டி போல மாறிய பூனம் பாஜ்வா அதே லுக்கில் அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் ஒருவழியாக உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். ஆனாலும், படவாய்ப்பு கிடைக்காததால், படவாய்ப்பை பெற விதவிதமாக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அட்டகாசமான போஸ்: சினிமாவில் இப்போது வாய்ப்புகள் இல்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும், நடிகை பூனம் பாஜ்வா தற்போது, முன்னழகு எடுப்பாக தெரியும் படி, பால்கனியில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் லைக்ஸ்கள் மலைபோல் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











