Poonam Bajwa: அந்த பெண்களிடம் உஷாரா இருங்க.. பூனம் பாஜ்வா அட்வைஸ்!
சென்னை: அழகான கொழு கொழு நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இணையத்தில் தனது ரசிகர்களை தினமும் குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பூனம் பாஜ்வா ஆண் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
நடிகை பூனம் பாஜ்வா: சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் பாஜ்வா, முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்ததை அடுத்து, துரோகி, தெனாவட்டு ஜெயிக்கிற குதிரை, தம்பிக்கோட்டை என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியான நடிகை: ஒருகட்டத்தில் இவருக்கு தமிழில் வாய்ப்பு குறைந்து போனதால், மலையாள பக்கம் சென்றார். அங்கும் வாய்ப்பு சரியாக இல்லாததால் மலையாளம், தமிழ் என மாறி மாறி நடித்து வந்த பூனம் பாஜ்வா ஆம்பள, அரண்மனை 2, முத்துன கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது பூனம் பாஜ்வாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால், இணையத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார்.
ஆண்களுக்கு அட்வைஸ்: தற்போது நடிகை பூனம் பாஜ்வா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது, அவர் உங்களுடன் தோழியாக காதலியாக, மனைவியாக, பயணிக்கும், பெண்கள் எந்த ஒரு நாட்டிற்கும் மகாராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் தான் மகாராணி. அவர்களை போற்றி கொண்டாடுங்கள், அவர்களின் அழகையும், அன்பையும், பாராட்டுங்கள். சரி எல்லாத்தையும் மறந்துடலாம் என்று சொல்லும் பெண்களிடம் உஷாராக இருங்கள். ஏனென்றால், பெண்கள் எதையும் மறப்பதே இல்லை. குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் வரும் மற்றொரு பெண் சம்பந்தப்பட்ட விஷயத்தை பெண்கள் மறக்கவே மாட்டார்கள். எனவே அப்படி ஒரு பெண் உங்களிடம் சொன்னால் நீங்கள் ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும் என நடிகை பூனம் பாஜ்வா ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











