அடடா.. படுக்கை அறையில் செம.. பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன் பூனம் பஜ்வா வெளியிட்ட வீடியோ!

சென்னை: அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பூனம் பஜ்வாவின் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் அதில் இருந்து விலகிய நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள பிக்பாஸ் 8 ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டிடிஎஃப் வாசன், தொகுப்பாளர் ஜெகன், நடிகர் ரஞ்சித், குக் வித் கோமாளி ஜோயா, குரேஷி, ஆர்ஜே ஆனந்தி, பூனம் பஜ்வா ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளன. ஆனால், கடைசி நேரத்தில் தான் இதில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பது உறுதியாக தெரியவரும்.

poonam bajwa instagram photos

பூனம் பஜ்வா: இப்படி அனைவரும், இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், நடிகை பூனம் பஜ்வா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டி டவுசர் போட்டுக் கொண்டு, படுக்கை அறையில் முட்டி போட்டு அட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த பேன்ஸ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்னாடியே இப்படியா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் ஆக்டிவ்: மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பூனம் சிங் பாஜ்வா. இவரின் பெற்றோர் அமர்ஜித் சிங் பஜ்வா, ஜெயலட்சுமி பஜ்வா ஆவார்கள். இவரின் தந்தை கடற்படை அதிகாரி ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் படித்த பூனம் சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். இவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், ஒரு சில விளம்பர படத்தில் மாடலாக இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஒரு சில படத்தில் கமிட்டான இவர், தமிழில், சேவல் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். சேவல் படத்தை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு படவாய்ப்பு பெரியதாக இல்லாததால், இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X