இப்படி போகுதா கதை..பட வாய்ப்பு இல்லை.. இன்ஸ்டா மூலம் சம்பாதிக்கும் நடிகை!

சென்னை: அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. ஜீவாவுடன் சில படங்களில் ஜோடிப் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர், சைடு ரோல் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் சரிந்துப் போக தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டி சம்பாதித்து வருகிறார்.

இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. முதல் திரைப்படமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட படமாக இருந்தது. இந்த படத்தில் பரத்துடன் காதல், சோகம் பிரிவு என அனைத்துவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருப்பார். அது மட்டுமில்லாமல் முதல் படத்திலேயே மொட்டை தலையுடன் பல காட்சிகளில் வந்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

Actress Poonam Bajwa is earning through Instagram

அடுத்தடுத்த படங்களில்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்தார். கச்சேரி ஆரம்பம் படத்தில் இடம் பெற்ற கச்சேரி கச்சேரி களக்கட்டுதடி பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவருக்கு, திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரோமியோ ஜூலியட், முத்துனக்கத்திரிக்காய் திரைப்படத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி, கை நழுவிய வாய்ப்பை மீண்டும் பெற்றுவிட முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு எதுவும் கை கொடுக்கவில்லை.

இணையத்தில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் பூனம் பாஜ்வா, கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இவருக்கு சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்பதால், பேன்ஸ் ஜொள்ளு விட்டு இவரின் போட்டோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். பட வாய்ப்பு இல்லாததால், வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அம்மணி இப்படி, இன்ஸ்டாகிராமுக்கு மாறிவிட்டார்.

காபி குடிக்கலாமா: அண்மையில் பூனம் பஜ்வா தனது, சமூக வலைத்தளப்பக்கத்தில், ஆண்கள் பொதுவாக பெண்களிடம் காபி குடிக்க போலாமா என்று கேட்பார்கள். அவர்கள் அப்படி அழைப்பதில் பல விஷயம் இருக்கு, அது எனக்கு நன்றாகவே தெரியும், அப்படி அவர்கள் அழைத்தால், ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X