Poonam Bajwa: பறிபோகும் பூனம் பஜ்வா சுதந்திரம்? சொந்தக்காரங்க தொல்லை தாங்க முடியல! புலம்பாத குறைதான்
சென்னை: நடிகை பூனம் பாஜ்வா.. 90ஸ் கிட்ஸ்களின் அபிமான நடிகைகளில் ஒருவர். முன்பெல்லாம் தீபாவளி வந்தால் தொலைக்காட்சிகளில் திரையுலகில் உள்ள நடிகைகளில் உங்கள் கனவுக் கன்னி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்டு, அது தனி நிகழ்ச்சியாகவே ஒளிபரப்பபடும். அப்படியான கேள்விகளுக்கு பூனம் பாஜ்வாவின் பெயரைச் சொல்லி அவர்தான் தங்களது கனவுக் கன்னி என்று மகுடம் சூட்டி உள்ளார்கள். அப்படியான பூனம் பாஜ்வா இப்போது கனிசமனா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவரது கிளாமர், டான்ஸ், நடிப்பு என ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வந்தார்கள். இவரது படங்கள் சில சரியாகப் போகாததால் பூனம் பாஜ்வா திரை உலகில் இருந்து மெல்ல மெல்ல விலகிப் போனார். ஆனாலும் இயக்குநர் சுந்தர் சி படங்கள் என்றால் மறுப்பு சொல்லாமல் நடித்து விடுவார் என்று கூறும் அளவுக்கு சுந்தர் சி மீது தனி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் பூனம்.

ரசிகர்கள்: இவர் சினிமாவில் இருந்து சற்றே விலகி இருந்தாலும் ரசிகர்களுடன் எப்போதும் இணைந்தே உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்கள் தொடங்கி ஹோம்லியான புகைப்படங்கள் வரை என தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இது மட்டும் இல்லமால் இவர் நடத்தும் யூடியூப் சேனலில் தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து வருகிறார். இவற்றுக்கு எல்லாம் தனி வரவேற்பும் ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது.
பாவாடையைக் கழட்டிய வீடியோ: இந்நிலையில் பூனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நகைச்சுவையான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, உறவினர்கள் தங்களது வீட்டிற்கு வந்துவிட்டு வெளியே போனதும், தான் அணிந்துள்ள பாவாடையைக் கழட்டி தோளில் போட்டுக்கொண்டு பெருமூச்சு விட்டு நிம்மதியாக நடந்து செல்கிறார் பூனம். அதாவது உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் தனது சுதந்திரத்திற்கு இருக்க முடிவதில்லை என்பதைத்தான் அந்த வீடியோவில் அவர் எக்ஸ்பிரஸ் செய்கிறாராம். மேலும் இந்த வீடியோவுக்கு உண்மையைச் சொல்லுங்க நீங்களும் இப்படிதானே என்று கேப்ஷனும் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











