இவர்தான் என் 'சோல்மெட்' நீச்சல் குளத்தில் காதலருடன் லூட்டியடிக்கும் பூனம் பஜ்வா தீயாய் பரவும் போட்டோ

சென்னை: பிரபல நடிகையான பூனம் பாஜ்வா ரொமான்டிக்காக பிறந்தநாள் வாழ்த்தை கூறி தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

நடிகை பூனம் பாஜ்வா மும்பையை பூர்விகமாக கொண்டவர். தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

 முத்தினக் கத்தரிக்காய்

முத்தினக் கத்தரிக்காய்

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை தொடர்ந்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கன்னட படங்களிலும் கமிட்டாகி வருகிறார் பூனம் பாஜ்வா. ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், ஆகிய படங்களில் நடித்துள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கவர்ச்சி தூக்கலாக

கவர்ச்சி தூக்கலாக

கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்க வைத்தார்.

காதலர் அறிமுகம்

காதலர் அறிமுகம்

இந்நிலையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து, தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா. அதாவது தனது காதலரை அறிமுகப்படுத்தும் வகையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து காதலருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

என் சிறகுகள்..

என் சிறகுகள்..

இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள பதிவில்,
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் வேர்களுக்கு, என் மைதானத்திற்கு, என் சிறகுகளுக்கும்! இந்த அழகான பையனுக்கு, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அழகான ஆத்மா, என்னுடைய க்ரைம் பார்ட்னர், வாழ்க்கை துணை, ரொமான்டிக் டேட், விளையாட்டுத் தோழர், சோல் மெட், எல்லா கனவுகளிலும் என் கோ கிரியேட்டர், எல்லா தருணங்களிலும் மேஜிக்!!

சொல்லும் வார்த்தைகளை விட..

சொல்லும் வார்த்தைகளை விட..

நான் உங்களுக்காக உத்தேசித்துள்ளேன், எல்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், உற்சாகமான அன்பும், வேடிக்கையாகவும், இந்த தருணத்திலிருந்து பயணிக்க வேண்டும், என்றென்றும்! இந்த நாள் இன்னும் பல வரவேண்டும் பூபூ !! வார்த்தைகளால் எப்போதும் சொல்லக்கூடியதை விட நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கமான போட்டோஸ்

நெருக்கமான போட்டோஸ்

மேலும் தனது காதலர் சுனீலுடன் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளித்து மகிழும் போட்டோவையும் பூனம் பாஜ்வா தனது சமூக வலைதள பக்கத்திர் ஷேர் செய்துள்ளார். மேலும் பீச்சில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்ளும் போட்டோ என பல போட்டோக்களை பூனம் பாஜ்வா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

பூனம் பாஜ்வாவின் இந்த பதிவையும் அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களையும் பலரும் லைக் செய்து வருகின்றனர். பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு பூனம் பாஜ்வாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X