கவர்ச்சியில் எல்லை மீறும் பூனம் பாஜ்வா.. பட வாய்ப்பை வாங்கியே ஆகணுமாம்!
சென்னை : நடிகை பூனம் பாஜ்வா தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழிலும் வெற்றிப் படங்களில் இவரை பார்க்க முடிந்தது.
தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.
சுந்தர் சியுடன் இவர் இணைந்து நடித்திருந்த முத்தின கத்திரிக்கா, அரண்மனை 2 ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

நடிகை பூனம் பாஜ்வா
மாடலிங் மூலமே சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றார் நடிகை பூனம் பாஜ்வா. முதலில் தெலுங்கில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது அதிகப்படியான கவர்ச்சி ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறது.

சேவல் படத்தில் அறிமுகம்
தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற படத்தில்தான் அறிமுகமானார் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அடுத்தடுத்த படங்கள்
ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், சுந்தர் சியுடன் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் பூனம் பாஜ்வா நடித்துள்ளார். குப்பத்து ராஜா என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார் பூனம் பாஜ்வா.

கவர்ச்சிப் புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இவர் வெளியிட்டுவரும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை வேறு லெவலில் கவர்ந்து வருகிறது. படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து இத்தகைய கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

பிகினி புகைப்படங்கள்
பிகினியிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக சோம்பல் முறிக்கும்வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் அதிகமான லைக்ஸ்களை அள்ளியது. இதனிடையே தற்போது இன்னருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மேலும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

அதீத கவர்ச்சி
இவரது இந்தப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அதை ரசிக்கவே செய்கின்றனர். ஆனாலும் அதிகமான கவர்ச்சி ஒருசிலரை முகம் சுளிக்க வைக்கிறது. அதை அவர்கள் கமெண்டிலும் கூறி வருகின்றனர். ஏன் இப்படி அதீதமான கவர்ச்சி காட்ட வேண்டும என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











