Poonam Bajwa: பீரும் கையுமாக லூட்டி அடிக்கும் பூனம் பஜ்வா.. நாளுக்கு நாள் அழகு கூட இதுதான் காரணமா?
மலேசியா: நடிகை பூனம் பஜ்வா, தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நடிகைகளில் ஒருவர். 2005ஆம் ஆண்டில் இருந்து திரை உலகில் இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார். அதன் பின்னர் சில தோல்விப் படங்களால் ஃபீல்ட் அவுட் ஆன நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் அவர் மலேசியாவுக்கு சென்று ட்ரிப் அடித்த போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் சேவல் படத்தில் சிம்ரனின் தங்கையாகவும், பரத்திற்கு ஜோடியாகவும் அறிமுகமானவர் பூனம். இந்த படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்ததால் இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் கமிட் ஆகி வந்தார். தமிழில் இவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக மாறியது. இவர் அறிமுகமான காலத்தில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த படங்களில் போட்டி போட்டு பூனம் பஜ்வாவை புக் செய்ய ஆரம்பித்தார்கள்.
ரொமான்ஸ் காட்சிகள் தொடங்கி, அட்டகாசமான நடனம், கிளாமர் என தன்னால் எங்கெல்லாம், ஸ்கோர் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் ஸ்கோர் செய்தார். இவர் தமிழ் சினிமாவில் இருந்த நடிகர் ஒருவரோடு காதலில் இருப்பதாக எல்லாம் பேசப்பட்டார். மேலும் விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் அவர் திட்டமிட்டு வருவதாக எல்லாம் கிசுகிசுக்கள் பரவியது. தமிழ் சினிமாவில் எப்படி கொடி கட்டிப் பறந்தாரோ, அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்.

பீல்ட் அவுட் காரணம்: நடிகையைப் பொறுத்தவரையில் ஒரு கட்டத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலுமே இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்விப் படங்களாக மாற, நடிகை ஃபீல்ட் அவுட் நடிகையாக மாறினார். அவ்வப்போது இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகும் படங்களில் மட்டும் நடித்து வந்தார். இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
இன்ஸ்டாகிராம்: பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவான நபர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் தனது கிளாமர் புகைப்படங்களையும் குளித்து முடித்த கையோடு ஈரத் துணியோடு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட அவ்வப்போது பகிரப்படும். இந்நிலையில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மலேசியா சென்ற போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பீரும் கையுமாக பூனம்: அவர் பகிர்ந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் அவர் கையில் பீர் வைத்துக் கொண்டு, அதை குடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் மலேசியாவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்திற்கு சென்ற அவர் அங்கு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் , பூனம் பஜ்வாவுக்கு வயசாக வயசாக அழகு கூடிக் கொண்டே போக காரணம் அந்த அவர் குடிக்கும் பீரா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். பூனம் தற்போது 36வது வயதில் உள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











