யுகாதி பண்டிகைக்கு சூப்பரா வாழ்ந்து சொன்ன பூனம் பாஜ்வா.. உருகிப்போன ஃபேன்ஸ்!
சென்னை: யுகாதி பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை பூனம் பாஜ்வா, தனது ரசிகர்களுக்கு சூப்பராக யுகாதிவாழ்த்து சொல்லி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த பூனம் சிங் பாஜ்வாவின் தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரி ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் படித்த பூனம் பாஜ்வா, சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், ஒரு சில விளம்பரத்திலும் நடித்து வந்தார். அதன்பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வர, சென்னைக்கு வந்த இவருக்கு சேவல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை பூனம்: முதல் படத்திலேயே அப்பாவியான பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்திருந்த பூனத்திற்கு, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அழகு, திறமையும் இருந்த போது, படவாய்ப்பு வந்தால் போதும் என நினைத்த பூனம், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்பை இழந்தார். பின் சுந்தர் சியின் முத்துனகத்திரிக்காய் படத்திற்கு கவர்ச்சியாக நடித்தார். அதன் பிறகு அதுபோலவே கதாபாத்திரமே வந்தன.
வாழ்த்து சொன்ன நடிகை: பூனம் பஜ்வாவிற்கு படவாய்ப்பு பெரியதாக இல்லாததால், இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது யுகாதிக்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அழகாக தாவனி கட்டிக்கொண்டு, ரசிகர்களுக்கு யுகாதி வாழ்த்து சொல்லி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், அந்த வீடியோவை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

யுகாதி பச்சடி: இன்று யுகாதி திருநாள் தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோலாகலமாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் யுகாதி பச்சடி என்பது அறுசுவையும் கலந்த ஒரு பச்சடி ஆகும். இதில் வெல்லம் , வேப்ப இலை , வேப்பிலைக் காய், வேப்பம் பூ , புளிச்சாறு , மாங்காய் போன்றவை கலந்திருக்கும். இந்த பச்சடியை யுகாதி பண்டிகையின் சிறப்பு உணவாக கடவுளுக்கு படையலிடுகின்றனர். இது இன்பம் மற்றும் துன்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வாழ்க்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதைத் தான் நடிகை பூனம் அந்த வீடியோவில் செய்து காட்டி வாழ்த்து கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











