மேடம் ரொம்ப ஓபன் டைப் போல.. மெல்லிய சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை!
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா. முன்பைப் போல பிஸியாக இல்லாவிட்டாலும், தமிழில் அவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை இன்றளவும் குறையாமல் வைத்து இருக்கிறார்.
திரையுலக வாய்ப்புகள் குறைந்தாலும், ரசிகர்கள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதில் பூனம் பாஜ்வா கவனமாக இருக்கிறார். அதற்காகவே அவ்வப்போது விதவிதமான ஸ்டைல்களில் போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் செய்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பூனம் பாஜ்வா, மஞ்சள் நிற மெல்லிய சேலையில் மொத்த அழகையும் காட்டி அவர் பதிவிட்டு இருக்கும் போட்டோஸ் இளைஞர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இந்த போட்டோவை பார்த்த பூனம் பாஜ்வாயின் ரசிகர்கள் "மேடம் ரொம்ப ஓடன் டைப் போல என்றும்", அழகு அள்ளுதே என்றும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பூனம் பாஜ்பாவை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த போட்டோ பதிவிட்ட சில நிமிடத்திலேயே லைக்குககை குவித்து வருகிறது.

நடிகை பூனம் பாஜ்வா: அழகான நடிகையான பூனம் பாஜ்வா, 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 'துரோகி', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், பின் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், நீண்ட காலமாக ஹீரோயின் வேடங்களிலேயே நடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மலையாள சினிமா பக்கம் சென்றார். ஆனால், அங்கும்சரியான வாய்ப்பு இல்லாததால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவழியில்லாமல் 'ஆம்பள' படத்தில் கெஸ்ட் ரோல் நடித்தார். அதன் பின்னர் 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்கா', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார்.


Click it and Unblock the Notifications











