அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பூனம் பாஜ்வாவின் அட்டகாசமான போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை பூனம் பாஜ்வா, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது தனது ஃபோட்டோஷூட் படங்கள், விதவிதமான ரீல்ஸ்களை தினமும் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியுடன் வைத்து இருக்கிறார்.
நடிகை பூனம் பாஜ்வா: தற்போது பூனம் பாஜ்வா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வீட்டின் மாடியில் அமைதியான சூழலில் யோகா மேட்டில் பல்வேறு ஆசனங்களில் அவர் பயிற்சி செய்யும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் உடையில் அவர் வீரபத்ராசனம் (Warrior pose) போன்ற யோகா ஆசனங்களை செய்துள்ளார். மேலும் கைகளை உயர்த்தி நீட்டும் ஆசனங்கள் மற்றும் தியான நிலையில் அமர்ந்திருக்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. காலை நேர சூரிய ஒளியில் அமைதியாக யோகா செய்வது போல காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

புதுவித யோகாசனம்: தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தேனாவட்டு, ரோமியோ ஜீலியட் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், கவர்ச்சியான ரோலில் முத்துனகத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடித்தார். இதனால், இவரின் படவாய்ப்பு மொத்தமாக இல்லாமல் போனது. இதனால், சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவரது ஃபிட்னஸ், யோகா மற்றும் லைஃப்ஸ்டைல் பதிவுகள் பலருக்கும் உடல்நலத்தை பராமரிக்க ஊக்கமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பாராட்டும் ஃபேன்ஸ்: இந்த புதிய யோகா புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "Fitness Queen", "Healthy Lifestyle", போன்ற கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு பூனம் பாஜ்வாவை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவித்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











