நடிகையை கர்ப்பமாக்கி.. வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர்.. வெடி பட நடிகை பகீர் தகவல்!

சென்னை: தெலுங்கு இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக வெடிப்பட நடிகை பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்

மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடக்கும் பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல பெண்களிடம் நடத்திய விசாரணை அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், மலையாள சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடத்தை நடிகைகள் சந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

poonam kaur telugu cinema

ஹேமா கமிஷன் அறிக்கை: இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில், ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து சித்திக் ராஜினாமா செய்தார். அதே போல பழம் பெரும் நடிகர் திலகனின் மகளும் பெரிய நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பூனம் கவுர்: இந்நிலையில், தமிழில் 2007ம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நரேனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பயணம், விஷாலுடன் வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

நாசமாக்கிய இயக்குநர்: நடிகை பூனம் கபூர் அண்மையில், நடிகர் பவன் கல்யாண் மற்றும் இயக்குநர் திரி விக்ரம் ஆகியோர் மீது குற்றம் சாட்டிய நிலையில், தற்போது பஞ்சாப் நடிகையின் வாழ்க்கையை பிரபல இயக்குநர் ஒருவர் நாசமாக்கிவிட்ட தனது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு இயக்குநர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து, அவரின் சினிமா வாழ்க்கையையே நாசமாக்கி விட்டார். தெலுங்கு சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குநர், அந்த நடிகைக்கு செய்த துரோகத்திற்கு, தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பஞ்சாபி நடிகைக்கு பெயருக்கு உதவி செய்தனர்.

யார் அந்த இயக்குநர்: ஆனால் நானும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான அவரும் அரசியல் காரணங்களால் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டோம் என பதிவிட்டுள்ளார். அந்த நடிகை யார், அந்த பிரபலமான இயக்குநர் யார் என்று பெயரை குறிப்பிடாமல் பூனம் கவுர் பதிவிட்டுள்ளதால்,யார் அந்த பிரபல இயக்குநர் என்பதும், நடிகை யார் என்பதும் தெரியவில்லை. நடிகையின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கு சினிமாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X