துபாய் தொழிலதிபரின் 2வது வாரிசை சுமக்கும் நடிகை பூர்ணா.. கோடிக்கணக்கான சொத்து!

சென்னை: கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். மலையாள படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தமிழில்,முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கொடைக்கானல், கந்தக் கோட்டை, துரோகி, அர்ஜுனன் காதலி, அடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலாகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரகத்தி, அடங்க மறு, இவனுக்கு எங்கேயோ மச்சம், காப்பான், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்

Poorna pregnant
Photo Credit:

நடிகை பூர்ணா: இவர் கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஷானித் ஆஸிப் அலி என்ற துபாய் தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலான. பெரும் தொழிலதிபரான பூர்ணாவின் கணவர் திருமணத்திற்கு பிறகு, 2700 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளை பரிசாக கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றையும் பரிசாக அளித்ததாக அப்போது செய்திகள் வெளியானது. தற்போது அந்த தங்கத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து பூர்ணாவிற்கு 2023 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

Poorna pregnant
Photo Credit:

2வது வாரிசு: குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த பூர்ணா தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, நடிகை பூர்ணா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அவருக்கு கணவர் விமர்சையாக வளைக்காப்பு நடந்துள்ளது. நடிகை பூர்ணாவின் வளைக்காப்பு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாய் தொழிலதிபரின் இரண்டாவது வாரிசை பூர்ணா விரைவில் பெற்று எடுக்க உள்ளார். இரண்டாவது முறையாக பூர்ணா கர்ப்பமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வந்தனர். பூர்ணா துபாயில் செட்டில் ஆகிவிட்ட போதிலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக அவ்வப்போது அவர் இந்தியா வந்து செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X