திறந்த மனதுடன் கொள்ளை அழகில் மெய் மறக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை பூர்ணா!
சென்னை : மலையாள சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
இப்பொழுது ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் சிறந்த நடிகையாக தென்னிந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூர்ணா இப்பொழுது திறந்த மனதுடன் கொள்ளை அழகில் மெய் மறந்தவாறு போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முதல் படமே வெற்றி
எம்டன் மகன் வெற்றியைத் தொடர்ந்து பரத்,திருமுருகன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. மலையாள சினிமாவில் பம்பரமாக சுற்றி மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத்தொடங்கின.

சரியான வாய்ப்புகள்
அர்ஜுனன் காதலி,கொடைக்கானல், கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் என இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மலையாளம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் இன்று வரை திணறி வருகிறார்.

தலைவி
அதனால் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என கதைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் பூர்ணா இப்பொழுது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள தலைவி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Recommended Video

பளபளக்கும் கொள்ளை அழகில்
த்ரிஷ்யம் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கு ரீமேக் பணிகளில் தொடங்கியது. அதில் வெங்கடேஷ் மற்றும் மீனா லீட் ரோலில் நடித்துவர பூர்ணா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அதேசமயம் விதவிதமான போட்டோஷூட்டிலும் கலக்கும் பூர்ணா இப்பொழுது திறந்த மனதுடன் பளபளக்கும் கொள்ளை அழகில் அனைவரும் மெய் மறக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











