சிகப்பு உடையில் தேவதை போல் மிளிரும் பூர்ணா.. செம்ம கியூட் போட்டோ ஷூட்!...

கொச்சி : இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பூர்ணா.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் அவரது 106வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அடிக்கடி புதுப்புது போட்டோ ஷூட்களை நடத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை பூர்ணா இப்போது கொதிக்கும் ரெட் காஸ்டியூமில் ஜொலிக்கும் தேவதை போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக இருக்கிறார்.

பரத்துக்கு ஜோடியாக

பரத்துக்கு ஜோடியாக

நன்கு நடிக்கத் தெரிந்த மிகச் சிறந்த நடிகை ஆனாலும் சரியான படவாய்ப்புகளும் கதைகளும் அமையாததால் இன்று வரை சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் நடிகை பூர்ணா. தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பூர்ணா அதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மீண்டும் கேரளாவுக்கே

மீண்டும் கேரளாவுக்கே

பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருக்கும் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில வருடங்களிலேயே மீண்டும் கேரளாவுக்கே திரும்பிச்சென்று மலையாளப் படங்களில் நடித்து கிடைக்கிற கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு உரிய அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.

தலைவி

தலைவி

சவரக்கத்தி, அடங்கமறு, லாக்கப், அம்மாயி,காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் வந்து செல்லும் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவரும் தலைவி - யில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆசை வந்து விட்டதோ

ஆசை வந்து விட்டதோ

இதற்கிடையில் தெலுங்கிலும் படு பிசியாக நடித்து வரும் இவருக்கு வாய்ப்புகள் தெலுங்கிலும் குவிய தொடங்கி இருக்க நடிகர் பாலகிருஷ்ணாவின் 106-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் பூர்ணாவுக்கு விரைவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை எக்கச்சக்கமான போட்டோஸ் ஷூட்டை நடித்தி கலக்கி வருகிறார்.

கெத்தாக போஸ்

கெத்தாக போஸ்

அந்த வகையில் இப்பொழுது கொதிக்கும் ரெட் காஸ்டியூமில் நிலாப் போல ஜொலிக்கும் அம்சமான லுக்கில் செம கெத்தாக போஸ் கொடுத்துக்கொண்டு உள்ள பூர்ணாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாக தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X