ரெட்ரோ லுக்கில் சைட் ரோஸ் வைத்துக்கொண்டு 60ஸ் ஹீரோயின்ஸ் போல கலக்கும் நடிகை பூர்ணா!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார்.

தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு அடுத்ததாக சுந்தரி வெளியாக உள்ளது இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

வித்தியாசமான போட்டோ ஷூட்களில் கலைக்கி வரும் இவர் இப்பொழுது, 60ஸ் ஹீரோயின்ஸ் போல ரெட்ரோ லுக்கில் சைட் ரோஸ் வைத்துக்கொண்டு எடுத்துள்ள சூப்பரான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு வந்த

தமிழ் சினிமாவுக்கு வந்த

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

சிறிய வேடத்தில்

சிறிய வேடத்தில்

அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றார்.

பல அடல்ட் காட்சிகள்

பல அடல்ட் காட்சிகள்

சமீபகாலமாக திரைத்துறையில் ஓடிடியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வர பல திரைப்படங்கள் திரையில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்போது தெலுங்கில் நடித்துள்ள சுந்தரி படமும் விரைவில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து நிலையில் அதில் பல அடல்ட் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சைட் ரோஸ்

சைட் ரோஸ்

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பட்டைய கிளப்பி வரும் பூர்ணாவுக்கு விரைவில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கைதூக்கி விடும் என்ற நம்பிக்கையில் இருக்க போட்டோஷூட்களிலும் கலக்கி வரும் இவர் எப்பொழுது 60களில் இருந்த கதாநாயகிகளை போல அசத்தலான ரெட்ரோ லுக்கில் கருப்பு நிற சேலையில் சைட் ரோஸ் வைத்துக்கொண்டு அம்சமாக போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X