ஷாம்னா காசிம் தெரியுமா?

By Sudha

Poorna
ஷாம்னா காசிம் என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. குறிப்பாக தமிழில் யாருக்குமே தெரியாது. ஆனால் பூர்ணா என்றால் அட அவரா என்று நன்றாகத் தெரியும். பூர்ணாவின் ஒரிஜினல் பெயரே ஷாம்னா காசிம்தானாம்.

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர்தான் பூர்ணா. தனது முதல் படமான கொடைக்கானல் படத்தில் வேறு ஒரு பெயருடன் நடித்தார். பின்னர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பூர்ணா என்ற பெயருக்கு மாறினார்.இப்போது வரை அதே பெயரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார் பூர்ணா. அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். அதே பெயரிலேயே தாய்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

பூர்ணா இப்போது ரொம்ப பிசி. மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு களேபரமாக இறங்கி விட்டார்.

நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.

இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார். இப்போது ஹீரோவாகவும் மகரு மன்னே மூலம் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் ஒவியர் ரவிவர்மா குறித்த படமாம். ரவிவர்மா வடித்த முதல் ஓவியம் தமயந்தி. அதையே கதையாக மாற்றி எடுத்து வருகின்றார் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.

ரவிவர்மா வரையும் முதல் ஓவியமான தமயந்தி, உயிர் பெற்று நேரில் வருகிறாள். அதன் பின்னர் நடப்பதுதான் படத்தின் கதையாம். இதில் ரவிவர்மாவாக சந்தோஷ் சிவன் நடிக்க, தமயந்தியாக, ரவிவர்மாவின் கனவு தேவதையாக பூர்ணா நடிக்கிறார்.
இதுகுறித்து பூர்ணா கூறுகையில், சந்தோஷ் சிவனை ஹீரோவாக பார்க்க வியப்பாக இருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான அவர் சிறந்த நடிகராகவும் இருக்கிறார்.

எனக்கு இப்படத்தில் நல்ல கேரக்டர்.சிறப்பாக நடித்துள்ளேன். அதேபோல கவர்ச்சியிலும் புகுந்து விளையாடியுள்ளேன் என்கிறார் தெத்துப் பல் தெரிய சிரித்தபடி.

அது சரி ஷாம்னா என்ற பெயரே நல்லாத்தானே இருக்கு, பிறகு எதற்கு பூர்ணா...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X