நடிகை பூர்ணாவுக்கு டும் டும்.. இவர் தான் என் வருங்கால கணவர்.. அம்மணிக்கு கல்யாண கலை வந்துடுச்சே!

சென்னை : நடிகை பூர்ணா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா அதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருந்தார். இவர் நடித்த முதல் படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

மலையான படங்களில்

மலையான படங்களில்

மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை. சவரக்கத்தி, அடங்கமறு, லாக்கப், அம்மாயி,காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

படம் ஓடவில்லை

படம் ஓடவில்லை

மேலும், ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ்,தெலுங்கு, இந்தியில் வெளியான இத்திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, அவ்வபோது போட்டோஷூட்களை நடத்தி படவாய்ப்பை தேடி வருகிறார்.

என் வருங்கால கணவர்

என் வருங்கால கணவர்

இந்நிலையில், நடிகை பூர்ணா,தனது இன்ஸ்டாவில் தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். அதில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியேடுத்து வைக்கிறேன் என பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

பூர்ணாவின் வருங்கால கணவரின் பெயர் சானிப் ஆசிப் அலி என்றும், இவர் துபாயில் தொழிலதிபராக இருக்கிறாராம். நடிகை பூர்ணாவின் இயற்பெயர் சாம்னா கசிம் ஆகும். இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக்கொண்டார். தற்போது நிச்சயம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X