வருங்கால கணவருடன் ஓணம் கொண்டாடிய நடிகை..டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை : நடிகை பூர்ணா தனது வருங்கால கணவருடன் ஓணம் பாண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகை பூர்ணா. அப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருப்பார். இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக்கொண்டார். இவர் நடித்த முதல் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார். மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை.

தலைவி படத்தில்

தலைவி படத்தில்

சவரக்கத்தி, அடங்கமறு, லாக்கப், அம்மாயி,காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். மேலும், ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ்,தெலுங்கு, இந்தியில் வெளியான இத்திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இதையடுத்து, அவ்வபோது போட்டோஷூட்களை நடத்தி படவாய்ப்பை தேடி வரும் பூர்ணா, திருமணம் செய்துகொள்ள போகும் நபருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியேடுத்து வைக்கிறேன் என பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, கடந்த மே மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வருங்கால கணவருடன்

வருங்கால கணவருடன்

இந்நிலையில், நடிகை பூர்ணா தனது வருங்கால கணவர் பெயர் ஷானிப் ஆசிப் அலியுடன் ஒணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பூர்ணாவின் வருங்கால கணவர் ஷானிப் ஜோபிஎஸ் குழும நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X