தொட்டுப் பேசிய போட்டியாளர்.. ஓவரா சீன் போட்ட நடிகை.. கடுப்பான ஆடியன்ஸ் !

சென்னை : ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர் ஒருவர் தொட்டு பேசியதால் கடுப்பான நடிகை பூர்ணா அவரை வாய்க்கு வந்தபடி திட்டி பேசியுள்ளார்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் பூர்ணா .

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருந்தார். இவர் நடித்த முதல் படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

குணசித்திர கதாபாத்திரத்தில்

குணசித்திர கதாபாத்திரத்தில்

மலையாளத்தில் இவருக்கு பட வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. கிடைத்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை. சவரக்கத்தி, அடங்கமறு, லாக்கப், அம்மாயி,காப்பான், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

வருங்கால கணவர்

வருங்கால கணவர்

தற்போது பூர்ணாவுக்கு படவாயப்பு இல்லாதால், இதுதான் திருமணம் செய்து கொள்ள சரியான நேரம் என முடிவு செய்துள்ளார். தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அவர் பெயர் சானிப் ஆசிப் அலி என்றும், இவர் துபாயில் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அசிங்கப்படுத்திய பூர்ணா

நடிகை பூர்ணா தற்போது கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த போட்டியாளர் குறித்து பூர்ணா மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த போட்டியாளர் பூர்ணாவின் தோளின் மீது கைவைத்து எதையோ சொல்ல முயன்றார். இதனால், ஷாக்கடித்தது போல் அதிர்ச்சி அடைந்த பூர்ணா.. என்ன பண்றீங்க.. என் மேல எதுக்கு கைவெச்சீங்க என கேட்டு அந்த போட்டியாளரை அசிங்கப்படுத்தி உள்ளார். இந்த காட்சி, அந்த நிகழ்ச்சியின ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

ஓவராக தெரியவில்லையா?

ஓவராக தெரியவில்லையா?

என்ன இதெல்லாம் பூர்ணாவுக்கு ஓவரா தெரியவில்லையா ? அந்த போட்டியாளர் தப்பாக எந்த செயலையும் செய்யவில்லை, தோளின் மீது கை வைத்துள்ளார் இதுக்கு இவ்வளவு பெரிய சீன் தேவையா ? என்று பூர்ணாவை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X