நடனப்பள்ளி தொடங்குகிறார் நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா நடனப்பள்ளி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தால் சீரியலுக்கு வருவார்கள். ஆனால் நடிகை பூர்ணா நாட்டியப்பள்ளி ஒன்றை தொடங்கப்போகிறாராம்.
டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற நடன போட்டியில் கலந்துக்கொண்டு, பிறகு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான பூர்ணா, அதையடுத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து தொடர்ந்து கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி ஆட்டம், வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள பூர்ணாவுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
இந்த நிலையில், நடன கலைஞரான பூர்ணா, தனக்கு தெரிந்த பரதநாட்டியத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது சொந்த ஊரான கேரள மாநிலம், கன்னூரில் பரதநாட்டியப் பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். ஆரம்ப பணியில் உள்ள இந்த நடனப் பள்ளி இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக செயல்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











