சிம்பிளா தயிர்சாதம் கொடுத்தாக்கூட சாப்பிட்டுடுவேன்.. ஆனா சமைக்க சொன்னா.. பூர்ணிமா பாக்கியராஜ் ஓபன்!
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் தொடர்ந்து மோகன், பாக்கியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 90களில் அனைவரையும் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர். ஒரு காலகட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பூர்ணிமா, இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் சாந்தனு கீகீயை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளார். இவர் படங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடனப்பள்ளி நடத்தி வருகிறார்.

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ்: நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் பூர்ணிமா பாக்கியராஜ் நடித்திருந்தாலும் பூர்ணிமா -மோகன் ஜோடி மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து பாக்யராஜுடனும் சில படங்களில் நடித்து வெற்றி கொடுத்த பூர்ணிமா பாக்கியராஜ், ஒரு கட்டத்தில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் சாந்தனு ஆங்கர் கீகீயை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
சமையல் திறன் குறித்து பூர்ணிமா: இவருக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இதனிடையே, திருமணமாகி செட்டில் ஆன பூர்ணிமா தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சினிமாவிலும் அவ்வப்போது சில கேரக்டர்களில் நடித்து வரும் பூர்ணிமா, சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் மல்லி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது பேட்டிகளையும் கொடுத்து வரும் பூர்ணிமா பாக்கியராஜ் தன்னுடைய சமையல் திறமை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
சமைக்க பிடிக்கவே பிடிக்காது: அதில் தனக்கு சமைக்கும் ஆர்வம் எப்போதுமே இருந்தது கிடையாது என்றும் வேறு வழியில்லாமல் சில நேரங்களில் தான் சமைப்பேன் என்றும் பூர்ணிமா பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். வீட்டில் சமைப்பதற்கு ஆட்கள் இருப்பதாகவும் தனக்கு சாதாரணமாக தயிர் சாதம் கொடுத்தால் கூட சாப்பிட்டு விடுவேன், ஆனால் சமைக்க சொன்னால் அது தனக்கு பிடிக்காது என்றும் பூர்ணிமா பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தானும் தன்னுடைய மருமகள் கீகீயும் மாற்றி மாற்றி சமைத்து அட்ஜஸ்ட் செய்ததாகவும் பூர்ணிமா பாக்கியராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
29 ஆண்டுகளுக்குப்பிறகு ரீ-என்ட்ரி: கொரோனா காலத்திலும் தன்னுடைய வீட்டில் சமைத்து போடுவதற்கு ஆட்கள் இருந்ததாவும் அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கணவர், குழந்தைகள் என 29 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார்.முன்னதாக சன்டிவியின் கண்மணி சீரியலில் நடித்திருந்த பூர்ணிமா பாக்கியராஜிற்கு இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. முன்னதாக நடிக்காமல் இருந்த காலங்களில் பேஷன் டிசைனிங்கில் பூர்ணிமா பாக்கியராஜ் கவனம் செலுத்தி வந்தார். தனக்கு இது மிகவும் பிடிக்கும் என முன்னதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











