குஜராத்திலிருந்து 'அரக்கோணம்' வந்த பிராச்சி!

அட்டகாசமான உடல் வாகு, அசரடிக்கும் அழகு ஆகியவற்றுடன் அரக்கோணம் படத்தில் நடிக்கும் பிராச்சிக்கு, தெலுங்குதான் திரைக்களத்தை அமைத்துக் கொடுத்ததாம்.
பிராச்சி, குஜராத்தியாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது மும்பையிலாம். பல விளம்பரப் படங்களில் நடித்துள்ள பிராச்சி, தெலுங்கில் ஆட்டோ ராஜா மூலம் அறிமுகமானவர்.
இதுதவிர பஞ்சமுகி என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளாராம் பிராச்சி. இப்படத்தில் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடியுள்ளார் பிராச்சி.
இப்போது அரக்கோணம் வழியாக கோலிவுட்டில் லேண்ட் ஆகியுள்ளார். அரக்கோணம், ஒரு திரில்லர் படமாகும். இருந்தாலும், பிராச்சியின் கிளாமரும் படத்தில் விசேஷமாக இருக்குமாம்.
ஸ்ரீமன்னுக்கு ஜோடியாக இதில் பிராச்சி நடித்துள்ளாராம். படத்தின் முக்கிய வில்லனாக வருபவர் பொன்னம்பலம்.
சிங்கம் சுதாகர் ரெட்டி என்பவர் இப்படத்தின்க தை, திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார். சிங்கத்துடன் ரமணா குடிபதி இணைந்து தயாரித்துள்ளார்.
ஜூனில் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











