திருமணத்துக்கு அது மட்டும் போதாது.. நடிகை பிரகதி செய்யும் அட்வைஸ்.. சூப்பரா பேசிருக்காங்களே!
சென்னை: பாக்யராஜ் இயக்கி நடித்த வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரகதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்துவந்த அவர்; திருமணம் செய்துகொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் நடிக்க வந்து சின்னத்திரையில் கோலோச்சிய அவர்; சமீபத்தில் பவர் லிஃப்ட்டிங்கில் பதக்கம் வென்று அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவை சேர்ந்த பிரகதி மாடலிங்கில் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிறகு தெலுங்கு திரையுலக கதவுகள் அவருக்காக திறந்ததை அடுத்து அங்கு நடிக்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட சூழலில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் நடித்து தமிழில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்த அவர்; திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். இதன் காரணமாக சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கும் சூழல் உருவானது. பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர்; இரண்டாவது இன்னிங்ஸில் கேரக்டர் ரோல்களை ஏற்க ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி சீரியல்களிலும் கலக்க ஆரம்பித்தார் பிரகதி.

பவர் லிஃப்ட்டிங்கில் சாதனை: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் துருக்கியில் நடந்த ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அவருக்கு வயது 49 என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் அந்தப் போட்டியில் கலந்துகொண்டபோது வயதை வைத்து குறைத்து மதிப்பிட்டார்கள். அப்படி பேசியவர்களுக்கு வெற்றியின் மூலம் தரமான பதிலடியையும் கொடுத்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "திருமணம் செய்துகொள்வதற்கு வயது ஒரு பொருட்டு இல்லை. அதேபோல் வயது இருந்தால் மட்டும் போதாது. திருமணம் செய்துகொள்வதற்கு நிறைய முதிர்ச்சி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும், புரிதலையும் கொண்டிருக்க வேண்டும். திருமணத்துக்கு இந்த மூன்றும்தான் முக்கியம்.
உறவு நிலைக்காது: மரியாதையும், நம்பிக்கையும் இல்லை என்றால் எந்த உறவும் நீண்ட காலம் நிலைக்காது. உறவு நீடிக்க ஒருவரையொருவர் மரியாதை செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். ஒருவருடைய எண்ணங்களை மற்றொருவர் புரிந்துகொள்ளவும் வேண்டும். இரண்டு பேரிடமும் அந்த குணம் இருப்பதும் முக்கியம்" என்றார்.


Click it and Unblock the Notifications











