பெட்ரோல் ஊற்றி கொளுத்துங்க.. பெண்களை தொட பயம் வரணும்.. நடிகை பிரகதி!

சென்னை: பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரகதி, தமிழ் திரைப்படங்களை விட அதிகமான தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், பெண்களுக்கு எதிராக அட்டூழியம் செய்பவர்களை "பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும்" என்று பேசி உள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீட்ல விஷேஷங்க. இந்த திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை பிரகதி. இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததால், அடுத்ததாக கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பெரிய மருது' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் லீட் ரோலில் நடித்து வந்த பிரபதி, ஜெயம் படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக மாறி, சிலம்பாட்டம், எத்தன், தோனி, கெத்து ஆகிய படங்களில் நடித்தார். இவர் கடைசியாக பிரபுதேவா நடித்த 'பஹீரா' படத்தில் நடித்திருந்தார்.

Pragathi interview
Photo Credit:

திறமையானவர்: நடிகை பிரகதி தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களில் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 49 வயதாகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் கொண்ட பிரகதி, தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு வந்தார். உடற்தகுதி மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்ல நினைத்த நடிகை பிரகதி, துருக்கியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பவர் லிஃப்டிங்கில் களமிறங்கி 4 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

கொளுத்த வேண்டும்: இந்நிலையில் நடிகை பிரகதி,ஊடகம் ஒன்று மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், இந்த சமுதாயத்தில் நடக்கும் அநீதிகள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், அட்டூழியங்கள், வன்கொடுமைகள் குறித்து பேசிய பிரகதி, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. அப்ப குற்றம் செய்பவர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்கள் பூமிக்கு சுமையாக இருக்கிறார்கள்.

பயம் வரணும்: அத்தகைய குற்றவாளிகளுக்கு சட்டப்பூர்வ கொடுக்கப்படும் தண்டனைகளை விட, கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களை "பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும்" என்றும், அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும், பெண்ணை தவறாக தொட நினைப்பவர்கள் மனதில் பயம் வரும். மக்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டும், குற்றவாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட வேண்டும் என்றும் என்று நடிகை பிரகதி உணர்ச்சியுடன் பேசி உள்ளார். நடிகை பிரகதியின் இந்த தைரியமான நிலைப்பாட்டுக்கு ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X