2 டோஸ் போட்டும் வந்துருச்சே... இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

சென்னை: இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பிரபல நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். மாடலாகவும் வலம் வருகிறார்.

தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரக்யா ஜெய்ஸ்வால்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான விரட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அதே ஆண்டு அறிமுகமானார் பிரக்யா ஜெய்ஸ்வால். சுதீப் கிஷன், வருண் தேஜ், மஞ்சு மனோஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.

பாலிவுட்டிலும் பிஸி

பாலிவுட்டிலும் பிஸி

குருஷேத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட படத்திலும் அறிமுகமாகியுள்ளார் பிரக்யா ஜெய்ஸ்வால். தற்போது அகன்டா என்ற தெலுங்கு படத்திலும் அன்டிம்; தி ஃபைனல் ட்ரூத் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு

இந்நிலையில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் பிரக்யா ஜெய்ஸ்வால்.

இரண்டு டோஸ் தடுப்பூசி

இரண்டு டோஸ் தடுப்பூசி

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை பிரக்யா. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரக்யா ஜெய்ஸ்வால்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும்

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் பதிவிட்டிருப்பதாவது, "எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X