ப்பா.. எப்டி இப்டில்லாம்.. தலைக்கீழாக நின்று யோகா செய்யும் நடிகை.. செம க்ளீக் என பாராட்டும் ஃபேன்ஸ்!
சென்னை: கைகளை மட்டுமே தரையில் வைத்து பிரபல நடிகை யோகா செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டேராடுனை பூர்விகமாக கொண்டவர் பிரணதி ராய் பிரகாஷ். இவர் பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி செலிபிரிட்டியாக வலம் வருகிறார்.
ஏராளமான அழகிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார் பிரணதி ராய், 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் அரையிறுதி வரை சென்றார் பிரணதி.

வெப் சீரிஸ் நடிகை
பிரணதியின் அப்பா ஆர்மியில் இருந்ததால் நாட்டின் பல பகுதியிலும் வசித்துள்ளார் பிரணதி. பிரணதி ராய் ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரணதி, வெப் சீரிஸ்களையும் விட்டு வைப்பதில்லை.

பாய்சன் வெப் சீரிஸ்
கடந்த ஆண்டு வெளியான பாய்சன் என்ற வெப் சீரிஸில் நடித்தார். தொடர்ந்து பல வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரணதி, 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

யோகா செய்யும் பிரணதி
அவ்வப்போது தனது ஹாட் மற்றும் க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது மொட்டை மாடியில் யோகா செய்யும் பிரணதி தலை கீழாக நிற்கிறார்.

எப்படி இப்படி..
கைகள் மட்டுமே தரையில் பேலன்ஸ் செய்ய மொத்த உடம்பையும் தலைக்கீழாக நிறுத்தியிருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இப்படி செய்தீர்கள் என பிரமிப்புடன் கேட்டு வருகின்றர். சில நெட்டிசன்கள் நீங்கள் ஹெல்த்தியாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











