அழகான குட்டி தேவதையை பெற்றெடுத்த சகுனி பட ஹீரோயின்.. குழந்தையின் புகைப்படங்கள் வெளியீடு!
பெங்களூரு: நடிகை பிரணிதா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழில் நடிகர் கார்த்தி உடன் சகுனி, அவரது அண்ணன் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வரும் பிரணிதா கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை பிரணிதாவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் அன்ன தானம்
நடிகை பிரணிதா தனது டிரஸ்ட் மூலம் கொரோனா காலத்தில் தொடர்ந்து பல ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி மிகப்பெரிய சேவையை செய்தார். கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி மற்றும் சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசிலமணி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரணிதா திருமணம்
கடந்த 2021ம் ஆண்டு திடீரென நிதின் ராஜு என்பவரை நடிகை பிரணிதா திருமணம் செய்து கொண்டார். திரை பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டமாக நடத்தாமல் கொரோனா பரவல் காரணமாக உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

பேபி பம்ப் புகைப்படங்கள்
கர்ப்பமாக இருக்கிறேன் என்கிற அறிவிப்பை பிரெக்னன்ஸி டெஸ்ட் கார்டையே காட்டி அறிவித்து இருந்தார் பிரணிதா. மேலும், நிறைமாத கர்ப்பத்துடன் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி அதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி வந்தார் நடிகை பிரணிதா.

பெண் குழந்தை
இந்நிலையில், நடிகை பிரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வலியை அனுபவித்தேன். ஆனால், அவளின் திருமுகத்தை பார்த்ததும் அத்தனையும் தூசாக பறந்து விட்டது என மருத்துவமனையில் இருந்தபடியே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரணிதா.

மருத்துவர்களுக்கு நன்றி
கைனகாலஜிஸ்ட் அம்மா டாக்டர் ஜெயஸ்ரீ இருந்தது எனக்கு ரொம்பவே பேருதவியாக இருந்தது. மேலும், டாக்டர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர், அனஸ்தீஷியா கொடுத்து குறைவான வலியுடன் பிரசவம் பார்க்க உதவிய மருத்துவர் சுப்பு என அனைத்து மருத்துவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் பிரணிதா.

ரசிகர்கள் வாழ்த்து
தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் நடிகை பிரணிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் போட்டு குழந்தை செம க்யூட்டாக இருக்கிறது. முகத்தை முழுவதுமாக காட்டுங்கள், என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











