Pranitha: பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உற்சாகத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!
சென்னை: நடிகை பிரணிதா, கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவந்த பிரணிதா, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்காக தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் படியான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரணிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை பிரணிதா: நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழிலும் உதயன், சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரணிதா. கடைசியாக தமிழில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்த பிரணிதா, கடந்த 2021ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்து தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய மகளின் புகைப்படங்களை பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரணிதா, தொடர்ந்து தான் கர்ப்பதாக இருப்பதை அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படங்களை ஏராளமான ரசிகர்கள் பார்த்து லைக்ஸ்களை குவித்தனர். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதாவை 6.6 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இரண்டாவது குழந்தை: இந்நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. முதலாவது பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் அறிவித்துள்ளார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும்படியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து லைக் செய்து வருகின்றனர். மேலும் பிரணிதாவின் இரண்டாவது குழந்தை குறித்து மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

2வதாக ஆண்குழந்தை: கடந்த 2009ம் ஆண்டில் தமிழில் வெளியான உதயன் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரியானார் பிரணிதா. தொடர்ந்து 2012ம் ஆண்டில் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நடித்துள்ள பிரணிதா, நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அர்னா என்ற மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.


Click it and Unblock the Notifications











