என்ன இந்த ஹீரோயினுக்கு இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்களா?... சூப்பரப்பு!
சென்னை : கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறப்பான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா.
தற்போது திருமணம் முடித்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை பிரணிதா
கடந்த 2010ல் திரைத்துறையில் போக்கிரி என்ற கன்னட படம் மூலம் காலெடுத்து வைத்தார் நடிகை பிரணிதா. இதையடுத்து கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் பிரணிதா.

சகுனிப்பட நாயகி
தமிழில், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்த்தியுடன் நடித்த சகுனி, சூர்யாவுடன் நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்கள் தமிழில் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன.

தெலுங்கில் அடுத்தடுத்த படங்கள்
தமிழ், கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் சிறப்பான நடிகையாக உள்ளார். தெலுங்கில் இவரது நடிப்பில் எம் பில்லோ எம் பிள்ளடோ படம் 2010ல் வெளியானது. இதையடுத்து பாவா, அத்தரிண்டிகி தாரீடி, பாண்டவுலு பாண்டவுலு தும்மிடா போன்ற படங்களும் இவரை சிறப்பான நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தியது.

கன்னடத்தில் முன்னணி நடிகை
கன்னடத்திலும் அடுத்தடுத்து போக்கிரி, ஜரசந்தா, பீம தீரதல்லி, சிநெகிதாரு, மிஸ்டர் 420, விஜ்ஹில், அன்கடக்ஹா, பிரம்மா போன்ற படங்கள் முன்னணி நடிகையாக்கியது. இதனிடையே கடந்த ஆண்டில் நிதின் ராஜ் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்துக் கொண்டார்.

5 மில்லியன் பாலோயர்கள்
சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் பிரணிதா. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் இவரை தற்போது 5 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

சிறப்பு வீடியோ
இதுகுறித்து மகிழ்ச்சி மற்றும் நன்றியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பான வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் பிரணிதா. ஆனால் ரசிகர்களிடையே பகிர்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். லவ் எமோஜியுடன் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











