வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா.. இல்ல வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா!
சென்னை: இந்திய மொழிகளில் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை பிரணிதா.
தமிழில் உதயன் படத்தில் நடித்து அறிமுகமான இவருக்கு அடுத்ததாக வெளியான சகுனி திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது
தமிழில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் கடைசியாக நடித்த பிரணிதா இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா என வர்ணிக்கின்றனர்

கார்த்திக்கு ஜோடியாக சகுனியில்
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி கன்னடத்தில் போக்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமான நடிகை பிரணிதா தமிழுக்கு உதயன் படத்தின் மூலம் அறிமுகமானார். சார்லி இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்த உதயன் சுமாரான வெற்றியைப் பெற்றது. எனவே இந்த படத்தில் ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்தில் நடித்து பிரபலமானார்.

அறிமுகத்தை பெற்றுத் தந்தது
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிக்கும் கார்த்தி அரசியல் சகுனிகாக நடித்த சகுனி திரைப்படத்தில் பிரணிதா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு பிரணிதாவுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் அடுத்தவருக்கு தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழில் எதுவும் கை கொடுக்காததால் இப்போது பாலிவுட்டில் நடிக்க தொடங்கியுள்ளார்

ஹிந்தி படங்களில் கவனம்
பெரும் எதிர்பார்ப்பில் நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியான ஹங்கமா 2 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அஜய் தேவ்கன் நடிப்பில் இந்தியா இராணுவத்தில் நடந்த போரை மையப்படுத்தியே வெளியான போஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவருக்கு பாராட்டுகள் குவிகிறது. போஜ் வெற்றி பெற்ற பூரிப்பில் அடுத்தடுத்த ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா
இப்போதைக்கு தென்னிந்திய மொழிகளில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றாலும் கன்னட மொழியில் ராவண ஆதாரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை பிரணிதா இப்பொழுது ஜன்னலின் வழியே சூரிய ஒளி வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு உள்ள புகைப்படத்தை பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் உங்கள வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா இல்ல வெயிலுக்கு காட்டமா வளத்தாங்களா என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











