குழந்தை பிறந்து இரண்டு மாசம்தானே ஆச்சு..அதற்குள் போட்டோஷூட் தேவையா?பிரணிதாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

சென்னை : நடிகை பிரணிதாவின் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து டென்ஷனான ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Recommended Video

Meena | Friendship Day-ல் ஆதரவளித்த தோழிகள் ! உற்சாகத்தில் ரசிகர்கள் *Kollywood

சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரணிதா.

பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

பிரணிதா சுபாஷ்

பிரணிதா சுபாஷ்

போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கார்த்தி உடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்தார். 2015ம் ஆண்டு சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார் இந்த படங்கள் சுமாராக ஓடின.

பெண் குழந்தை

பெண் குழந்தை

கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் நடித்த பிரணிதா, ராமண அவதாரா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, கடந்த ஆண்டு திடீரென நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பின்னர், தனது கணவரின் பிறந்த நாளில் தனக்கு குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார். இதையடுதது, ஜூலை 10ஆம் தேதி இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த. தனது குழந்தைக்கு அர்ணா என பெயர் வைத்துள்ளார்.

கணவருக்கு பாத பூஜை

கணவருக்கு பாத பூஜை

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பீமனா அமாவாசை முன்னிட்டு கணவனின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்வதாக கூறி கணவர் நிதின் ராஜூக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த படத்தை பார்த்த நெட்டின்கள் இது ஆணாதிக்கத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த புகைப்படம் சர்ச்சையில் சிக்கியது.

அதற்குள் போட்டோஷூட் தேவையா?

அதற்குள் போட்டோஷூட் தேவையா?

தற்போதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ளது. பச்சை நிற கோட்டை போட்டுக்கொண்டு, காலழகு மொத்தத்தையும் தெறியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்தாலும், ஒரு சில ரசிகர்கள், மேடம் குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது அதற்குள் போட்டோஷூட் தேவையா என்றும் குழந்தையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என்றும் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X