'போக்கிரி' பட பிரபல நடிகை கர்ப்பம்.. கணவர் பிறந்த நாளில் குட் நியூஸ்!
சென்னை : நடிகை பிரணிதா சுபாஷ் ,கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.
2010ல் திரைத்துறையில் போக்கிரி என்ற கன்னட படம் மூலம் காலெடுத்து வைத்தார் நடிகை பிரணிதா.
இதையடுத்து கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரணிதா, தமிழ், தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பிரணிதா சுபாஷ்
கன்னடத் திரைத்துறையில் கிடைத்த வரவேற்பை அடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து கவனம் பெற்றார். கடைசியாக, அதர்வா முரளியுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

திருமணம்
பிரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை காதலித்துள்ளார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

குட் நியூஸ்
இந்நிலையில், நடிகை பிரணிதா சுபாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். இதில் தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கூறியுள்ளார். தனது கணவர் நிதின் ராஜாவின் 34வது பிறந்தநாளுக்கு முன் கடவுள் எனக்கு கொடுத்த பெரிய பரிசு இது என்று பிரணிதா கூறியுள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து
கணவரின் பிறந்த நாளில் இந்த குட் நியூசை குறியுள்ள பிரணிதா, இந்த பதிவில் ப்ரெக்னென்சி சோதனை தொடர்பான முடிவுகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். பிரணிதா, நிதின் தம்பதியினருக்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











