2 குழந்தைகளுக்குத் தாயான பிறகும் இப்படியா? முத்து மாலைகளால் மூடப்பட்ட முதுகு.. பிரணிதாவின் போஸ்!

சென்னை: நடிகர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லான 'போக்கிரி' படத்தின் கன்னட ரீமேக்கான "பொர்கி" படம் மூலம்தான் இவர் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். அந்தத் திரைப்படம் 100 நாட்களைத் தாண்டி தியேட்டர்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்ததால், பிரணிதாவின் முதல் அடியே தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளுக்கும் ரெட் கார்பெட் விரித்தது.

குறையாத அதே வனப்பு: சினிமாவில் பிஸியாக இருந்த பிரணிதா, கடந்த 2021-ஆம் ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு 2022-ஆம் ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தையும், அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும், தனது உடற்கட்டைக் கச்சிதமாகப் பராமரித்து, கொஞ்சம் கூட அழகும் கவர்ச்சியும் குறையாமல் அப்படியே தேவதை போலத் ஜொலித்து வருகிறார் பிரணிதா.

Actress Pranitha Subhash
Photo Credit:

ஜன்னலோரம் போஸ்: தற்போது பிரணிதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு லேட்டஸ்ட் கிளாசி புகைப்படம் ரசிகர்களைச் சூடேற்றி வருகிறது. மெல்லிய க்ரீம் கலர் உடையில், ஜன்னல் திரைக்குப் பக்கத்தில் நின்றபடி ரசிகர்களைக் காந்தம் போல இழுக்கும் ஒரு சைடு போஸ் கொடுத்துள்ளார். முதுகுப் புறம் முழுவதும் முத்து மாலைகளால் பின்னப்பட்ட அந்தப் பேக்லெஸ் டிசைன் உடையில், கையில் வாட்ச், மோதிரம், கம்மல் அணிந்து அவர் கொடுத்திருக்கும் அந்த லுக் தான் இப்போதைய இணையத்தின் சென்சேஷன். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் அதே வனப்புடன் இருக்கிறாரே என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர், நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக 'எனக்கு வாய்த்த அடிமைகள்' மற்றும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அதன் பின் இவருக்கு தமிழில் பெரிதாக எந்தவாய்ப்பும் வரவில்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X