கவர்ச்சி ஓவர்டோஸ்.. உள்ளாடை தெரியும் அளவுக்கு இன்ஸ்டாவை அலறவிட்ட பிரணிதா!

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். கடந்த 2010-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'பொறுக்கி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தமிழில் கார்த்தி ஜோடியாக 'சகுனி' படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் 'மாஸ் என்கிற மாசிலாமணி' படத்திலும் நடித்தார். தெலுங்கில் பவன் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த 'அட்டாரங்கி தாரேதி' படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுத் தந்தது. மேலும், பாலிவுட்டில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா' படத்திலும் நடித்திருந்தார்.

இரண்டு குழந்தைகளின் தாய்: கொரோனா ஊரடங்கு காலத்தில் நித்தின் ராஜு எனும் தொழிலதிபரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு, தற்போது ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா, நயன்தாரா, நஸ்ரியா, பிரியாமணி உள்ளிட்ட பல டாப் நடிகைகள் மீண்டும் சினிமாவில் ரவுண்டு கட்டுவதைப் போல, பிரணிதாவும் மலையாளத்தில் வெளியான 'தங்கமணி' படம் மற்றும் கன்னடத்தில் 'ராமண அவதாரா' படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.

Pranitha Subhash photos
Photo Credit:

ஓவர்டோஸ் கவர்ச்சி: திருமணத்திற்குப் பின் சோசியல் மீடியாவில் குடும்பப் பெண்ணாக, பக்தி மோடில் ஆன்மீகப் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த பிரணிதாவா இப்படி? என ரசிகர்கள் வாயடைத்துப் போகும் அளவிற்குத் தனது புதிய கிளாமர் போட்டோக்களை தட்டிவிட்டுள்ளார்.

ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்: கருப்பு நிற மாடர்ன் அவுட்ஃபிட்டில், கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு, தனது உள்ளாடை மற்றும் இடுப்பழகு அச்சு அசலாகத் தெரியும்படி அவர் கொடுத்துள்ள ஓவர்டோஸ் கவர்ச்சிப் போஸ்கள் இணையத்தைக் கதிகலங்க வைத்துள்ளது. இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டைப் பார்த்த ரசிகர்கள், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறீங்களே பிரணிதா என ஜொள்ளு வடித்து கமெண்ட்டுகளைப் குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X