Summer Special: கையில் கிளாசுடன்.. தண்ணீரில் தஞ்சமடைந்த நடிகை.. அந்த போட்டோ தான் மாஸ்!

சென்னை: நடிகை பிரணீதாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இரண்டு குழந்தைகளை விட்டு தனது கணவருடன் ஜாலியாக இன்ப சுற்றுலா சென்றுள்ளார். நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நடிகை பகிர்ந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பார்ப்பதற்கு பளிங்கு சிலை போல இருக்கும் நடிகை பிரணீதா 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி படத்தின் கன்னட பதிப்பான 'போர்கி' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து எம் பில்லோ எம் பிள்ளடோ,பாவா என தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் நடித்தார். அதன் பின் தான் தமிழில் உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

pranitha subhash photos
Photo Credit:

நடிகை பிரணீதா: அந்த படத்திற்கு பின் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்தில் நடித்தார். இந்த படம் சரியாக ஒடவில்லை என்றாலும் பிரணீதாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன் பின் சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் படத்தில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்த பின்னரும் தமிழில் படவாய்ப்பு இல்லாததால், மீண்டும் கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாள பக்கம் சென்று வாய்ப்பு தேடி அலைந்தார்.

pranitha subhash photos
Photo Credit:

கையில் கிளாசு: இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு மகனும், 2024 ஆம் ஆண்டு ஒரு மகனும் பிறந்தனர். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

தற்போது கணவருடன் வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் சென்று இருக்கும் பிரணீதா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையை அணிந்து கொண்டு, கையில் கிளாசை வைத்துக்கொண்டு ஜாலியை தண்ணீரில் ஆட்டம் போட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும், குழந்தைகள் தொல்லை இல்லாமல் கணவருடன் தனியாக இன்ப சுற்றுலா சென்றுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் கணவரும்,மனைவியும் கையில் சரக்குடன் இருக்கும் அந்த போட்டோ தான் மாஸ் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X