twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ சிரித்தவர்கள்.. இப்போ சிந்திக்கிறார்கள்.. இந்து மதமும் கொரோனாவும்.. பிரணிதா ட்வீட்!

    |

    பெங்களூரு: கொரோனா வைரஸ் அதிகளவில் இந்தியர்களை தாக்காமல் இருக்க இந்து மத பழக்க வழக்கங்கள் தான் காரணம் என நடிகை பிரணிதா பதிவிட்டுள்ளார்.

    பெங்களூரை சேர்ந்த நடிகை பிரணிதா கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழில், இயக்குநர் சங்கர் தயாள் இயக்கத்தில் வெளியான சகுனி படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகவும், சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலமணி படத்திலும் நடித்துள்ளார்.

    இந்து மத பழக்கம்

    இந்து மத பழக்கம்

    கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும், யாருக்கும் கை கொடுக்காமல் வணக்கம் வைக்கலாம் என்றும் உலக நாடுகள் தற்போது, இந்திய கலாசாரத்தை பின்பற்றி வருகிறது. இது அனைத்தும், இந்து மத பழக்க வழக்கங்கள் என நடிகை பிரணிதா தெரிவித்து அட்டகாசமான ட்வீட் போட்டுள்ளார்.

    இந்தியர்களுக்கு குறைவாக

    சீனாவில் அதிகளவில் பாதிப்பையும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவில் சிலருக்கு மட்டுமே பரவியுள்ளது. அதிகளவில் இதன் தாக்கம் இல்லாமல் இருப்பதற்கு, நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் தான் என பிரணிதா அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    அப்போ சிரித்தார்கள்

    அப்போ சிரித்தார்கள்

    பிறருக்கு வணக்கம் வைத்தல், கை, கால்களை கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைவது, சாவு வீட்டுக்குச் சென்று வந்தால் குளிப்பது, மரங்களை வணங்குவது, அசைவம் உண்ணாமல் இருப்பது போன்ற பழக்க வழக்கங்களை இந்துக்கள் பின்பற்றும் போது சிரித்த உலகம், தற்போது கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள அதையே பின்பற்றி வருகிறது.

    வாழ்க்கை முறை

    வாழ்க்கை முறை

    சுத்தமாக இருத்தல், யோகா, சைவ உணவு, மூலிகை பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல நல்ல பண்புகளை நம் முன்னோர்கள் மதத்தின் பெயரால், நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இதை நாம், அவசியமற்றது என நினைத்து மறந்துவிடக் கூடாது என்ற நோக்கில் பிரணிதா பதிவிட்டுள்ள அந்த ட்வீட்டுக்கு கீழே பாராட்டுக்கள் குவிகிறது.

    English summary
    Saguni actress Pranitha tweeted how Hindu religion prevent against corona virus. Pranitha tweet praised by so many fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X