நான் தல-யின் தீவிர ரசிகை டா.. மங்காத்தா புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை !
சென்னை : சகுனி படத்தின் மூலம் பிரபலமான பிரணிதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ்.
முட்டக்கண்ணு முழியழகை கொண்டு நடிப்பின் மூலம் நம் அனைவரையும் விழுங்கிவரும் பிரணிதா சுபாஷ், தமிழில் கார்த்திக், ஜெய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானவர்.

போர்கி திரைப்படத்தின்
தமிழில் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் மிகவும் பிரபலமான பிரணிதா சுபாஷ் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரணிதா முதன்முதலில் கன்னடத்தில் வெளியான போர்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

பாக்ஸ் ஆபீஸ் கிங்
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட போக்கிரி திரைப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. கில்லி படத்தை ரீமேக் செய்ததை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் போக்கிரி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் முதன்முதலாக பிரபுதேவா இயக்குனராக அறிமுகமானார். போக்கிரி மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்து நடிகர் விஜய்யை மீண்டுமொரு முறை பாக்ஸ் ஆபீஸ் கிங் என சொல்ல வைத்தது.

100 நாட்களுக்கு மேல்
இவ்வாறு தெலுங்கு மற்றும் தமிழில் சக்கைப்போடு போட்ட போக்கிரி திரைப்படம் கன்னடத்தில் போர்கி என வெளியாகி இருந்தது. இந்தப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க ப்ரணிதா முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகம் செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு மொழிகளில் வெளியாகி சக்கைப்போடு போட்ட போக்கிரி திரைப்படம் கன்னடத்தில் போர்கி என்ற பெயரில் வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மிகப்பெரிய ரசிகர்
தமிழ் திரைத்துறையில் அஜித்திற்கு மிகப்பிரமாண்டமான ரசிகர் கூட்டம் இருந்துவரும் வேளையில் அதேபோன்று மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் அஜித் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தீவிர ரசிகை
திரைத்துறையில் பல நடிகர்களும் பல முன்னணி நடிகர்களுக்கு தீவிர ரசிகராக இருந்து வரும் வேளையில், தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் அஜீத்தின் தீவிர ரசிகை என பிரணிதா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் மனம் திறந்துள்ளார்.

தமிழ்மொழி தெரியாத
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழியிலும் சுழன்று சுழன்று நடித்துக் கொண்டு வரும் பிரணிதா தற்பொழுது தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் மங்காத்தா பட புகைப்படங்கள் அடங்கிய பதிவை ஷேர் செய்து அதில் நான் தல அஜித்தின் மிகத் தீவிரமான ரசிகை, எனக்கு தமிழ் மொழி தெரியாத போதே அஜித்தின் பல படங்களை பார்த்து ரசித்து உள்ளேன். என தானும் ஒரு தல ரசிகை என அனைவருக்கும் தெரிவித்துள்ள பிரணிதாவை தல ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஓரிரு மாதங்களில்
இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வந்த பிரணிதா சுபாஷ் தற்போது முதன்முறையாக ஹிந்தியிலும் தனது காலடியை எடுத்து வைத்துள்ளார். அஜய் தேவ்கான் மற்றும் சஞ்சய் தத் இருவரும் இணைந்து நடித்துள்ள புஜ் மற்றும் ஹங்கம்மா 2 போன்ற படங்களில் இவர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் OTT யில் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











